மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரசேகரராவ்!

இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் தோல்வியடைந்தார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். இதற்கிடையில் தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கே.சந்திரசேகரராவ் தனது பண்ணை வீட்டில் குளியல் அறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக கீழே […]
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த சண்முகராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவர், ஜெயதர்ஷினி என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். உரிமத்துடன் செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் உட்கடை கண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 36 […]
2024 தேர்தலுக்கு கிருஷ்ண ஜென்ம பூமி..! ஸ்பீடு எடுக்கும் பா.ஜ.க.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதற்கு ராம ஜென்ம பூமி விவகாரம் கை கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது பாஜகவின் கனவாக இருந்தது. அதையே தேர்தல் வாக்குறுதியாக கூறி ஆட்சியை பிடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்போது 2024 தேர்தலை கணக்கிட்டு கிருஷ்ணர் பிறந்த மதுராவை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. […]
கனிமொழியை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க… எதுக்காக தெரியுமா..?

நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று எதிர்ப்பு குரல் கொடுத்த காரணத்திற்காக இதுவரை 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குளிர்கால நாடாளுமன்றத் தொடரில் பங்கேற்க முடியாது. சஸ்பெண்ட் குறித்து பேசிய கனிமொழி, ‘’பாதுகாப்பு விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றார். இந்த முறைகேட்டுக்கு துணை போன எம்.பி. […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: ரூ.1.25 கோடி வழங்கிய சிம்சன் குழுமம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சிம்சன் குழுமத்தின் சார்பில் ரூ.1.25 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை […]
போஸ் கொடுக்க வரவில்லை! மக்களை பார்த்து கண் கலங்கிய டி.ராஜேந்தர்!

அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம் சார்பாக மிக்ஜாம் புயல் மழை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் வழங்கினார். வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும்4 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தியது. மழைநீரில் வீட்டு […]
விஜயகாந்த் முன்னிலையில் பிரேமலதா தே.மு.தி.க. பொதுச்செயலாளர் ஆனார்!

தே.மு.தி.க. தலைவர் முன்னிலையில், பிரேமலதா அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கலந்து கொண்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கலந்து கொள்ளும் முதல் செயற்குழு இதுவாகும். விஜயகாந்தை பார்த்த தொண்டர்கள் கரவொலி எழுப்பியும், பெண் நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதும் தங்கள் மகிழ்ச்சியை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு!

மிக்ஜாம் புயல் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் அனுப்பப்பட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3,4 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களின் வீடுகளுக்கள் வெள்ளநீர் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. புதில் பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவினர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய […]
ஓசூரில் எடப்பாடி பழனிசாமியை அடித்து, துவைத்து, தொங்கப்போட்ட ஓபிஎஸ்..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது முன்னிலும் வேகமாக எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேசியதில் அனல் தெறித்தது. ’’தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட நம் கழகத்தில் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று சட்ட விதிகளை உருவாக்கினார் புரட்சித் தலைவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அந்த விதிகளை பின்பற்றினார். ஆனால் இப்பொழுது […]
விஜய் மக்கள் இயக்கம்! சென்னையில் 25 மருத்துவ முகாம்கள்!

சென்னையில் 25 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் படியாக கடந்த பொதுத்தேர்வில் அதிகளவில் மதிப்பெண் வாங்கிய மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு விழா எடுத்து உதவித்தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]

