விஜய்யை தடுக்கும் த்ரிஷா..? சீரியஸாகும் போதை நடவடிக்கை

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகளை அழைத்துக்கொண்டு கோட்டைக்கு வருவேன் என்று விஜய் கூறியிருந்த விவகாரம் திமுகவினருக்கு கடும் உஷ்ணத்தை உருவாக்கியது. இதையடுத்து த்ரிஷா மீது போதை வழக்கு பதியப்படும் என்ற மிரட்டல் விடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன. விரைவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு விஜய் திட்டமிட்டிருக்கிறார். இந்த பயணத்தின் போது திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தவர்களைச் சந்திந்து ஆறுதல் சொல்ல இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து திமுக சீரியஸ் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதாவது த்ரிஷாவை […]
வைகோவுக்கு இம்புட்டுக் கோபமா..? ஓவர் ரியாக்ஷன் உடம்புக்கு ஆகாது

இப்போது எங்கு மீட்டிங் நடந்தாலும் அங்கு தலைவர்கள் பேசும் நேரத்தில் காலி சேர் இருக்கிறதா, யாராவது வெளியே போகிறார்களா என்றெல்லாம் படம் எடுத்துப் போடுவதில் மீடியாக்கள் கவனம் செலுத்துகின்றன. அதை பார்த்து கடுப்பான வைகோ மீது கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோபேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்திருக்கிறார்கள். அதைக் கண்டு கோபமான வைகோ ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் […]
எடப்பாடி ரியல் ஸ்டைல் வாக்கிங்… அதிகாலை பயண சுவாரஸ்யங்கள்

ஸ்டாலின் அவ்வப்போது நடைபயணம் செய்யும்போது ஒருசில நபர்களை சந்தித்துப் பேசுவது உண்டு. அந்த நேரத்தில் ஸ்டாலினை வேறு யாரும் நெருங்கிவிடக் கூடாது என்று சூட்டிங் நடத்துவது போன்று மக்களைத் தடுத்து நிறுத்தி வைப்பார்கள். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலையில் வாக்கிங் சென்றார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் ஒரு அம்சமாகவே இந்த வாக்கிங் பயணம் திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிஜமான மக்களுடன் அந்நியோன்யமாகப் பேசினார் எடப்பாடி. அப்போது, அதிமுக […]
அப்பாவிக் குழந்தைகள் மரணத்துக்கு யார் பொறுப்பு. பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

அதிகாலையில் எழும்பி பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வேன் மீது ரயில் மோதிய சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியிருக்கிறது. முதலில் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் […]
எடப்பாடி பயணத்தில் எங்கே நயினார் நாகேந்திரன்..? டூர் அலப்பறைகள்.

தேர்தல் வருகிறது என்றாலே நடைப்பயணம் செய்வது முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற ஸ்லோகனுடன் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து இன்று தொடங்கியிருக்கிறார். ராசியான கோமேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார் இ.பி.எஸ். எந்த ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கினால் […]
அன்வர் ராஜா பதவிக்கு மீண்டும் ஆபத்து..? பாஜக வில்லங்கப் பேச்சு

திராவிட மண்ணில் பாஜக காலூன்ற முயற்சி மேற்கொள்வதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. இந்த விவகாரம் மீண்டும் அதிமுக கூட்டணியில் குட்டையைக் குழப்பியிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் […]
திருமாவுக்கு நன்றி சொன்ன விஜய்… கூட்டணி உறுதியாகிறதா..?

செயற்குழுக் கூட்டத்தில் பரந்தூர் விமானநிலையத்துக்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து எந்த அரசியல்வாதியும் கருத்து சொல்லாத நிலையில் திருமாவளவன் மட்டுமே வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திருமாவுக்கு விஜய் போனில் நன்றி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. திமுகவில் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் விஜய்யுடன் கை கோர்ப்பது உறுதி என்கிறார்கள். இது குறித்து பேசும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவாளர்கள், ‘’கூட்டணிக்கு எதிர்நிலையில் அரசியல் செய்பவர்கள் என்ன பேசினாலும் அதை வரவேற்கவே கூடாது என்ற நிலையில் தான் இன்றைய அரசியல் […]
எடப்பாடிக்கு இசட் பிளஸ் பாஜகவின் பாதுகாப்பு… திமுகவை மிரட்டும் எழுச்சிப் பயணம்

எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் ஆரம்பிக்கும் சூழலில் திடீரென அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பாஜகவின் ஆசிர்வாதம் என்றே அதிமுகவினர் நினைக்கிறார்கள். அதோடு எழுச்சித்தமிழரின் புரட்சிப்பயணம் சூப்பர் ரிசல்ட் தரும் என்று குதூகலத்தில் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் அது வதந்தி என உறுதிபடுத்தப்பட்டாலும் பாதுகாப்பு கருதி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு […]
திருமாவை வெளியேற்றுகிறாரா செல்வப்பெருந்தகை.? கப்சிப் திமுக.. கொதிக்கும் விசிக

கூட்டணிக்குள் டாக்டர் ராமதாஸை கொண்டுவந்துவிட்டு, திருமாவளவனை வெளியே அனுப்ப வேண்டும் என்ற திமுக அசைன்மென்ட்டை செல்வப்பெருந்தகை மேற்கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். டாக்டர் ராமதாஸை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று செல்வப்பெருந்தகை தனியே பேசிவிட்டு வந்தார். இதையடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதில் தவறில்லை என்று கூறியிருந்தார். செல்வப்பெருந்தகையின் இந்த கருத்து திமுக கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான […]
விஜய்யிடம் இப்படி அவமானப்படலாமா பாஜக..? நயினார் மீண்டும் நம்பிக்கை

விஜய் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்று தெளிவாக அறிவிப்பு செய்துவிட்டார். ஆனாலும் பாஜகவினர் தொடர்ந்து கூட்டணி அழைப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார். இதன் பிறகும் அவமானத்துக்கு அஞ்சாமல் பாஜக கூட்டணிக்கு இழுக்குமா என்பதே கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’விஜய்யிடம் நூறாவது முறையாக பாஜக அவமானப்பட்டிருக்கிறது… அண்ணாமலை என்றால் இப்படி ஒரு அவமானம் […]

