மல்லை சத்யாவுக்கு அதிமுகவில் அழைப்பு..? 15ம் தேதி முடிவு

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவிற்கு மாமல்லபுரத்தில் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். “ஆரம்பிக்கலாமா ” என்று எழுதப்பட்ட கேக்கினை குடும்பத்தாருடனும் ஆதரவாளர்களுடனும் இணைந்து வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சத்யாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றே மதிமுகவின் அத்தனை தலைவர்களும் கருதுகிறார்கள். மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது. […]
அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு செய்தியை பரப்புகிறதா திமுக..? பாஜக கப்சிப்

மன அமைதிக்காக ஹரித்துவார் சென்று ராமரை சந்திக்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன். அதன் பிறகு இரவு அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இது ஒரு ரகசிய சந்திப்பு என்றும் இது குறித்து தகவல்கள் வெளியே வரக்கூடாது என்று பாஜக மேலிடம் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன் தரப்பில் செய்திகள் கசிய விடப்பட்டன. இந்த விவகாரம் அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷா சந்திப்பு நடக்கவே இல்லை என்று மூத்த தலைவர்கள் சிலர் உறுதி […]
அரசியலுக்கு செங்கோட்டையன் முழுக்கு போடுவாரா..? அமைதிப்பயணம் ஆரம்பம்

வரும் 9ம் தேதி செங்கோட்டையன் மீண்டும் மனம் திறந்து பேச இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் மன நிம்மதியைத் தேடி ஹரித்துவார் பயணம் செல்கிறார். மீண்டும் செங்கோட்டையன் பெரும் சலசலப்பு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அமைதிக்கு மாறியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிரவைத்துள்ளது. இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சூழ்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு செங்கோட்டையன், “நான் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன். கடவுள் […]
பஞ்சாயத்தாகும் பசும்பொன் தேவர் விவகாரம். இபிஎஸ்சுடன் மோதும் தலைகள்

கட்சியில் இருந்து விலகி நிற்கும் முக்குலத்தோர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் எழுப்பிய விவகாரத்தை சரிக்கட்டுவதற்காக இபிஎஸ் எழுச்சிப்பயணத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த விவகாரம் இப்போது பட்டியலின தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’மதுரை விமான நிலையம் – சின்ன உடைப்பு என்ற முழுக்க முழுக்க தேவேந்திர குல வேளாளர்கள் […]
செங்கோட்டையன் அழைப்புக்கு அலறும் அதிமுக புள்ளிகள். அடுத்து சிவி சண்முகம்..?

செங்கோட்டையன் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தால் அதிமுக இரண்டு துண்டாக உடைந்துபோகும், எக்கச்சக்க பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக வெளியே வருவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், பெங்களூரு புகழேந்தியைத் தவிர வேறு யாரும் அவரை மதிக்கவில்லை. தீவிர ஆதரவாளர்கள் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் பதவியைத் தூக்கி எறியவில்லை. இந்நிலையில் சிவி சண்முகம் அடுத்து ஆதரவுக் குரல் கொடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் நேற்றைய தினமே தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார் என்பதால் அரசியல் அனாதையாக மாறிவிட்டார் செங்கோட்டையன். […]
சசிகலா இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறாரா..? 450 கோடி ரூபாய் பினாமி

பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு அறிமுகம் செய்த காலத்தில் 450 கோடி ரூபாய்க்கு வி.கே.சசிகலா சர்க்கரை ஆலை வாங்கியிருப்பதாக சிபிஐ பதிவு செய்திருக்கும் வழக்கு புதிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பாஜகவினால் சிறைக்குப் போன சசிகலா இப்போது பாஜக ஆதரவாளராக மாறியிருக்கிறார். இந்த நிலையில் பண மதிப்பிழப்பு காலத்தில் சொத்து வாங்கியிருக்கும் விவகாரம் சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் என்ற சர்க்கரை ஆலை நிறுவனம் […]
அமெரிக்காவை விட அதானியே முக்கியம். ரஷ்யா எண்ணெய்க்குத் தடை இல்லை

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள விவகாரம் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா மீதான வரி விதிப்பு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை மாத இறுதியில் அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அவர் பகரிங்கமாக அறிவித்தார். அது தொடர்ந்த நிலையில் 25 சதவீத பரஸ்பர வரி மற்றும் கூடுதலாக […]
செங்கோட்டையனுக்கு நோட்டீஸ்… கட்சியிலிருந்து கல்தா

எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் விதித்த பத்து நாள் கெடு கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் எழுப்பியிருக்கும் விவகாரம் குறித்து பேசும் அதிமுகவினர், ‘’பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது. எந்தக் காலத்திலும் பழனிச்சாமி அவர்கள் டிடிவி ஓபிஎஸ் சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டார். எல்லோரும் தேவர் சமுதாய வாக்கு வங்கியில் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் டிடிவி, […]
நயினார் நாகேந்திரன் மகனுக்குப் பதவி… பாஜகவின் வாரிசு பஞ்சாயத்து

தமிழக பாஜகவில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய பதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையிலான நிர்வாக குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நயினார் நாகேந்திரன் மகனுக்கு தமிழக பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் […]
செங்கோட்டையன் கெடுவுக்கு இபிஎஸ் ஆலோசனை. அடுத்த அதிரடி வேலுமணி..?

“அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு ஒரு காலக்கெடு வைத்துள்ளோம். அதற்குள் அது நடக்காவிட்டால் எங்களது அடுத்த கட்ட முடிவை எல்லோரும் இணைந்து அறிவிப்போம்” என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று வெளிப்படையாக அறிவித்திருப்பது அதிமுகவில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அதோடு செங்கோட்டையன் பேசுகையில், ‘’நானும், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்பழகன் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தியது உண்மை. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்று செய்தியாளர்கள் […]

