News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வன்னியர்களுக்கு சமூக அநீதி? ஆர்.டி.ஐ. அறிக்கையை ராமதாஸ் ஏத்துக்க மாட்டாராம்.

தேர்தல் நேரங்களிலும் கட்சிக்குள் மந்தநிலை ஏற்படும் சமயத்திலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு என்பதை பெரிய பிரச்னை போன்று கிளப்பி பரபரப்பை ராமதாஸும் அன்புமணியும் உருவாக்குவார்கள். இந்த நிலையில் , சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் பாமக விடுக்கும் 10.5% கோரிக்கை வன்னியர்களுக்கு எதிரானது என்பதை காட்டுகிறது தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை MBBS படிப்பில் சேர்ந்த 24,330 […]

மதுரை எய்ம்ஸ், வானதி சீனிவாசனை போட்டுத் தாக்கும் சு.வெங்கடேசன்

கட்டுக்கதைகள் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பா.ஜ.க. தலைவர் வானதி சீனிவாசன் மதுரை எம்.பி. வெங்கடேசன் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவையும், தன்னை விமர்சனம் செய்த வானதி சீனிவாசனையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் மதுரை எம்.பி. வெங்கடேசன். இது குறித்து சு.வெங்கடேசன், ‘நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் வானதி சீனிவாசன். ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. […]

வயநாட்டில் வைரலாகும் மேஜர் சீதா ஷெல்கே… இவர் என்ன செஞ்சாருன்னு தெரியுமா?

இயற்கை பெருந்துயரமாக நடந்திருக்கும் வயநாடு நிலச்சரிவு 340க்கும் மேற்பட்ட நபர்களின் உயிரைப் பறித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஏராளமான நபர்கள் ஒரே இரவில் அத்தனை சொத்துக்களையும் பறிகொடுத்து ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தியின் வருகை பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. நிலச்சரிவு தொடங்கிய இடம் வரையிலும் நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும், இறந்தவர் உடல்களையும் பார்த்து வேதனை தெரிவித்தார். அதோடு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டிக் […]

ஒலிம்பிக்கில்  லக்‌ஷயா சென் வரலாற்று சாதனை… பதக்கம் கிடைக்குமா?

குட்டியூண்டு ஜப்பான், இத்தாலி, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நடத்திக்கொண்டு இருக்கும் நேரத்தில், நம் நாட்டு வீரர்கள் இன்னமும் தட்டுத் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் […]

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எடப்பாடி பழனிசாமி. எதற்காக இந்த சந்திப்பு தெரியுமா?

மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு செய்தி பரவியிருந்த நிலையில், அவரது வீட்டுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆறுதல் கூறிய விவகாரம் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சுமார் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக […]

நாடாளுமன்றத்தில் பிளாஸ்டிக் பக்கெட், கொள்ளிடத்தில் தடுப்பணை உடைப்பு. என்ன தான் நடக்குது.?

ஆயிரம் கோடி ரூபாயில் கட்டிய நாடாளுமன்றம் ஒழுகுகிறது தி.மு.க.வினர் மோடியை குறை சொல்லிவரும் நிலையில் காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை உடைந்திருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர், ‘’சில மாதங்களுக்கு முன்னர் 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துபோயிருக்கிறது.  அதே போல் இந்த தடுப்பணை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரிட் தூண்களும் சாய்ந்து விட்டன என்பது அப்பணியின் தரத்தினை குறிக்கிறது. 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை 6 மாதங்கள் கூட நிலைக்காதது […]

கலைஞர் நூலகத்தை கேவலப்படுத்தும் கார்த்தி சிதம்பரம். பா.ஜ.க.வுக்கு மாறப்  போகிறாரா..?

புத்தகம் படிப்பதையும் நூலகம் செல்வதையும் யாரும் விரும்புவதில்லை என்று ஒரு கும்பல் சொல்லிவரும் நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஒரே ஆண்டில் 10 லட்சம் பேர் வருகை புரிந்திருக்கிறார்கள் என்று தி.மு.க.வினர் பெருமைப்பட்டனர். அரசுத் துறை தேர்வுப் போட்டிகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம், ஸ்டாலினின் வெற்றி என்று தி.மு.க.வினர் கொண்டாடிவரும் நேரத்தில், இதுகுறித்து சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வில்லங்கமான ஒரு […]

பாலியல் கைதியாக சிக்கியிருக்கும் பிரபல தமிழ் நடிகை.! அதிரவைக்கும் துபாய் செக்ஸ் ராக்கெட்

கலைநிகழ்ச்சி என்ற பெயரில் துபாய்க்கு அழைத்துச்செல்லப்பட்ட பிரபல தமிழ் நடிகை நட்சத்திர ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டிருப்பதாகவும், அவரை மீட்கும் முயற்சியில் தமிழக காவல் துறை இறங்கியிருப்பதாக வரும் தகவல் கோடம்பாக்கத்தை அலற விட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறைக்கு கடந்த மே 29ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மூலம் புகார் ஒன்று வந்தது. அதில், துபாயில் சட்டவிரோதமாக கலை நிகழ்ச்சி என்று நடிகைகள் மற்றும் நடன கலைஞர்களான இளம்பெண்களை அழைத்து சென்று […]

ராகுல் காந்தியை கைது செய்யத் திட்டம்..? ரெய்டுக்குத் தயாராகும் அமலாக்கத்துறை

வரலாறு காணாத பேரழிவை சந்தித்திருக்கும் வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார் ராகுல் காந்தி. நிவாரண முகாம்களில் தங்கள் உறவுகள், உடைமைகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களை சந்தித்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘’வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. என் தந்தை இறந்தபோது நான் எப்படி உணர்ந்தேனோ அதைவிட துன்பத்தை  இன்று நான் உணர்கிறேன்’’ என்று பேசியிருக்கிறார். […]

பாரிஸ் ஒலிம்பிக்: 3வது பதக்கத்தை வென்ற இந்தியா!

ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இந்தியா தனது 3வது பதக்கத்தை பதிவு செய்துள்ளது.   பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.   போட்டித்தொடரின் 7வது நாளான இன்று (ஆகஸ்ட்1) ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே […]