வைரமுத்துக்கு முத்தமிழ் பேரறிஞர் விருது அவுட். தி.மு.க.வினர் செம ஹேப்பி

கலைஞர் கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை வைரமுத்து ஏற்கக்கூடாது என்று தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சுப.வீரபாண்டியன் வைரமுத்துக்கு நேரடியாகவே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்த நிலையில், முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை முத்தமிழ் பெருங்கவிஞர் என்று மாறுதல் செய்து பெற்றுக்கொண்டுள்ளார் வைரமுத்து. இதுகுறித்து வைரமுத்து, ‘’பொன்விழாக் காணும் மதுரைத் தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்ற பட்டத்தை எனக்கு வழங்கியது அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டயமும் பொற்கிழியும் வழங்கினார். […]
வங்கதேசத்தில் அடங்காத வன்முறை. இந்தியாவுக்குத் திரும்பும் 1 கோடி இந்துக்கள்?

இந்தியாவிற்கு தப்பிவந்திருக்கும் ஷேக் ஹசீனா இன்னும் இரண்டு நாட்கள் இங்கு தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதால் லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு ஆபத்து நிலவுவதாகவும் அவர்களை இந்தியாவில் குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று அங்கு இஸ்லாமியர்கள் கூறிவந்தாலும் சில இடங்களில் வன்முறை […]
தப்பியோடிய ஷேக் ஹசீனா! இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாரா?

வங்கதேச பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனா தப்பியோடியுள்ள நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் மாணவர்களின் போராட்டம் […]
வயநாடு நிலச்சரிவு: பேரழிவிலும் அதிர்ச்சி சம்பவம்!

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் அனைத்து மாநில மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30ம் தேதி அதிகாலை 1 மணியில் இருந்து 3 மணிவரை தொடர்ந்து 4 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அட்டமலை, வெள்ளரிமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய குக்கிராமங்களில் என […]
தமிழ்நாட்டில் கனமழை: எந்தெந்த இடங்களில் தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்க கனமழையும், விட்டுவிட்டும் மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், […]
உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி எப்போது? ஸ்டாலினே சொன்ன பதில் இது.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இம்மாதம் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சு பலமாக அடிபடுகிறது. அதோடு அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில், ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலமைச்சர் […]
போராடிய மாணவர்கள் கொன்று குவிப்பு. ரத்த ஆறு ஓடும் வங்கதேசத்துக்குப் போகாதீங்க…

ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்திருப்பதால் நாடெங்கும் ரத்தக்களறியாகி வருகிறது. காவல் துறையும் போராட்டக்காரர்களும் நடத்திவரும் போராட்டத்தில் ஏகப்பட்ட அப்பாவி மக்களும் பலியாகிவருகிறார்கள். நாடு முழுக்க ரத்த ஆறு ஓடுகிறது. ஆகவேவங்கதேசத்துக்குப் பயணிக்க வேண்டாம் என்று இந்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது. கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் […]
மசுரு, பிசிறு சீமானுக்கு சவுக்கு சங்கர் பாணியில் ட்ரீட்மென்ட்? மீண்டும் சீறிய விஜயலட்சுமி

சென்னையில் தி.மு.க. அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் சீமான் எல்லை மீறி பேசிவிட்டதாக பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மசுரு, பிசுருன்னு பேசுவேன் அதனால உனக்கென்னடா என்று காவல் துறை எஸ்.பி. வருண்குமார் மீது நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறார். தன்னுடைய கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகியை இப்படி சீமான் பேசியிருக்க மாட்டார் என்று அவரது தம்பிகள் நம்பிவந்த நேரத்தில், அப்படித்தான் பேசுவேன் என்று சீமான் ஒப்புக்கொண்டுள்ளது அத்தனை பேரையும் அதிரவைத்துள்ளது. ஒரு பெண் என்ற […]
விஜய்க்குப் போட்டியாக உதயநிதி..? அதிக மாணவர்களுக்குப் பரிசளிப்பு

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். விஜய்யின் செயல் சமுகவலைதளங்களில் பாராட்டு பெற்றது. இந்த விஷயத்தில் நடிகர் விஜய் செய்த பாராட்டை முறியடிக்கும் வகையில் அதிக மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் கொடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் செய்துவருகிறார் அமைச்சர் உதயநிதி. பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடைய […]
இணையத்தில் வைரலாகும் எடப்பாடி பழனிசாமி ஃபேமிலி தி.மு.க. Vs ஃபேமிலி

சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, கரூரில் இருக்கும் அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்துத்திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் உடன் சென்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் எடப்பாடி பழனிசாமியும் மற்ற தலைவர்களும் சேர்ந்து அந்நியோன்யமாகக் காட்சியளித்தார்கள். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பிறகு வேண்டுமென்றே திட்டமிட்டு அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகி […]

