சிறார்களுக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. ரத்தம்! உ.பி.யில் அதிர்ச்சி!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் இருப்பது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தலாசீமியா என்ற மரபணு நோய்க்கான சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவர்களுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட நிலையில், அதில் 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. அதில் […]
டெல்லி மெட்ரோவில் முதியவர் மீது இளைஞர் தாக்குதல்! வீடியோ வைரல்!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த முதியவரை, இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, மும்பை நகர மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாவது வழக்கம். காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள், வன்முறை சம்பவங்கள் என வெளியாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெஞ்சை பதற வைத்துவிடுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை இளைஞர் சரமாரியாக தாக்கிய சம்பவம் […]
தாயை கொலை செய்த மகன்! எதற்காக தெரியுமா?

ஸ்மார்ட் போன் வாங்க பணம் தர மறுத்த தாயை, சொந்த மகனே கொலை செய்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலாபாய் என்ற 47 வயது பெண்மணிக்கு திருமணமாகாத ராம்நாத்குலாப்ராவ் பத்வைக், தீபக் பத்வைக் என்ற 2 மகன்கள் உள்ளனர். கமலாபாய் தன்னுடைய மூத்த மகனான ராம்நாத் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தாய்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை என்று ராம்நாத் தனது தம்பியான தீபக்கிற்கு போன் செய்துள்ளார். […]
பிரபல ரவுடி படுகொலை! மதுரையில் பதற்றம்!

மதுரையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டியன்பட்ட அருகில் உள்ளது கருவேலம்பட்டி ரெயில்வேகேட். இப்பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது நெல்லை மாவட்டம் […]
கொலை வழக்கு! தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. நிர்வாகி கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில் கார் ஓட்டுநரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அந்த பணியுடன் சேர்த்து நடராஜன் நடத்தி வரும் நெய் கம்பெனியில் பணம் வசூல் செய்யும் வேலையையும் சேர்த்து பார்த்து […]
கொடநாடு வழக்கு நவ.24ம்தேதிக்கு ஒத்திவைப்பு! கால அவகாசம் கேட்டதன் பின்னணி!

கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் செல்போன் ஆதாரங்களை திரட்ட காலஅவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான், வளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கை கோவை மாவட்ட […]
2 ரவுடிகளின் உடல் இன்று பிரேத பரிசோதனை! பரபரப்பான ஸ்டான்லி மருத்துவமனை!

நேற்று (அக்.12) என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் இன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், பிரபல கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன்தான் கொலையாளி என்று உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் ரவுடி முத்து சரவணனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (அக்டோபர் […]
என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி! உடலை வாங்க மறுக்கும் தந்தை!

போலீசார் பணம் வாங்கிக் கொண்டு தான் என் மகனை கொன்றுவிட்டார்கள் என்று இன்று காலை என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சரவணனின் தந்தை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், பிரபல கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன்தான் கொலையாளி என்று உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் ரவுடி முத்து சரவணனை […]
பணத்தை ஏன் செலுத்தவில்லை? விஷாலை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!

ரூ.80 கோடி அளவுக்கு வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ள நீங்கள் ஏன் இன்னும் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று நடிகர் விஷாலை நீதிமன்றம் சரமாரியாக கேள்வியால் துளைத்தது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைக்காவுக்கும், நடிகர் விஷாலுக்குமான பணப்பிரச்சினை என்றுதான் முடியும் என்ற அளவுக்கு நீண்டுகொண்டே செல்கிறது. விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் லைக்கா நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 25 லட்சம் பெற்றுவிட்டு திருப்பித்தரவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக […]
சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! பரபரப்பு பின்னணி!

சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் என்று சொல்லப்படும் முத்துசரவணன் மற்றும் சதீஷ் என்ற 2 ரவுடிகள் இன்று போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அதிகாலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக டெல்லியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது […]

