கதறிய பெண்களுக்கு நீதிமன்றம் ஆறுதல். பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

’அண்ணா அடிக்காதீங்கண்ணா” என்று பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் […]
மாணவி ஸ்ரீமதியின் தாயார் முதல் குற்றவாளி..? வேங்கைவயல் பாணியில் கள்ளக்குறிச்சி

வேங்கைவயல் குற்றபத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கிலும் யாரும் எதிர்பாராத வகையில், மாணவியின் தாயார் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது அதிர்வை உண்டாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. மாணவியின் மரணத்திற்கு […]
அண்ணா பல்கலை விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு செம வெற்றி… நீதிமன்றம் சொன்னது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அண்ணா தி.மு.க. தொடங்கிவைத்த, ‘யார் அந்த சார்?’ என்ற விவகாரத்தை திசை திருப்பும் வகையில் பத்திரிகையாளர்களிடம் செல்போனை வாங்கிவைத்து, தொடர் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை நெருக்கடி கொடுத்தது. இந்த நெருக்கடிக்குப் பணியாமல் நீதிமன்றத்தில் போராடிய பத்திரிகையாளர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை […]
வேங்கை வயல் குற்றப்பத்திரிகை வழங்கலையா..? அதிர்ச்சி திருப்பம்

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளிகள் என்று சொல்லப்படும் நபர்களுக்கு குற்றப்பத்திரிகையே வழங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொந்தளிப்பு காட்டியிருக்கிறார்கள். தாங்கள் குடிக்கும் தண்ணீரில் பட்டியலின மக்களே எப்படி மலத்தைக் கலப்பார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இதற்கு முரசொலியில், ‘’புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராம குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகவும் இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் […]
மகா கும்பமேளாவில் சிதறிய உடல்கள்… நீராடப் போகாதீங்க

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் கும்பமேளாவுக்கான நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கும்பமேளாவில் புனித நீராட 6 நாட்கள் மிகவும் புனிதமானவை என்றாலும் ஜனவரி 29 மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சுமார் […]
தமிழகத்தில் சாலை விபத்து மரணம் மளமள குறைவு… செல்போன் பேசிய 4.20 லட்சம் பேர் மீது வழக்கு… சங்கர் ஜிவால் ஆக்ஷன் ரிப்போர்ட்

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. திட்டமிட்டு செயலாற்றி வருவதால், வரும் ஆண்டுகளில் விபத்துகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி நகர்வதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்திருக்கிறார். இதுதொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் விடுத்திருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் தொடர்ந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. […]
சீமான் போட்டோ… ஆடியோ எல்லாமே போலியா..? இப்படி பண்றீங்களேப்பா

பெரியார் மீது சீமான் விமர்சனம் வைக்கத் தொடங்கியபிறகு அவரது ஆதரவாளர்களே எதிர்நிலை எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சங்ககிரி ராஜ்குமார். வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கியிருக்கும் ராஜ்குமார் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் பேசிய சங்ககிரி ராஜ்குமார், ‘’நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி செய்து வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான் புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்து தருமாறு கேட்டார். எதற்காக […]
ஏமனின் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ்! தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் முடித்த நிமிஷா பிரியாவுக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்ற நிமிஷா அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். அப்போது தனியாக மருந்தகம் வைக்க வேண்டும் என்று நிமிஷாவுக்கு எண்ணம் எழுந்த நிலையில், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த மஹிதி என்பவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். மேலும் அவரை பல ஆண்டுகளாக கொடுமைப்பபடுத்தியுள்ளார். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது […]
சென்னை கல்லூரி மாணவி கொலை! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளிக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சத்யபிரியா என்ற கல்லூரி மாணவி, கல்லூரிக்கு செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற இளைஞர், மாணவி சத்யபிரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது சண்டை முற்றி, அவரை ஒடும் ரெயிலில் இருந்து […]
வருண்குமாருக்குப் பதவி உயர்வு… சீமானுக்குச் சிக்கல் ஆரம்பம்

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு படி வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. திருச்சி எஸ்.பியாக இருந்த வருண்குமார் திருச்சி டி.ஐ.ஜியாக மாறியிருக்கிறார். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சீமான் டீமை கலங்க வைத்திருக்கிறது. ஏனென்றால் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமாரின் கிரிமினல் அவதூறு வழக்கு நாளை திருச்சியில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சீமான் நேரில் […]

