News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அமீர் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள்- ஞானவேல் ராஜா

பருத்திவீரன் பிரச்சினை தொடர்பாக அமீர் குறித்து பேசியதற்கு மனப்பூர்வமாக தான் மன்னிப்புக் கேட்பதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். ‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையிலான பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக யூடியூப் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் குறித்து செய்திகள் வைரலாகி வந்து கொண்டிருந்தன. பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் அமீருக்கு ஆதரவு கரம் நீட்டி வந்த நிலையில், நடிகர் சிவகுமாரின் மொத்த குடும்பத்தின் […]

அது மன்னித்துவிடு அல்ல மரணித்துவிடு! மன்சூர் அலிகான் மீண்டும் திமிர் பேச்சு!

திரிஷாவின் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் மரணித்துவிடு என்று தான் சொன்னேன் என்று மன்சூர் அலிகான் மீண்டும் திமிராக கூறியுள்ளது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாவே திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில பிரபலங்கள் ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் சட்ட சிக்கல், இன்னொரு பக்கம் நடிகர்கள் சங்கத்தின் அழுத்தம் என நடிகர் மன்சூர் அலிகான் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சகநாயகி திரிஷாவே […]

சீமானை எதிர்க்க யாருக்கும் யோக்கியதை இல்லை! விஜயலட்சுமி பளிச்!

கடந்த 3 மாதமாக போலீஸ் வசம் இருக்கும் தனது மொபைல் போனை வாங்கிக்கொடுத்துவிட்டால் தான் இனி தமிழகத்திற்கே வரப்போவதில்லை என்று நடிகை விஜயலட்சுமி போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.   நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகை விஜயலட்சுமி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.   அந்த வீடியோவில், ‘‘கடந்த 2011ல் சீமானுக்கு எதிராக நான் கொடுத்த ஆதாரங்களை போலீசார் அழித்துவிட்டனர் என்னிடம் […]

குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் […]

சிக்கலில் குஷ்பு! பட்டியலின பெண்களின் போராட்டம் அறிவிப்பு!

குஷ்பு மன்னிப்பு கேட்கும் வரை ஓயுமாட்டோம் என்று பட்டியலினத்தைச் சேர்ந்த 500 பெண்கள் நாளை நடிகை குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற […]

புஷ்பா-2வில் மிரட்டும் அல்லு அர்ஜூன்

புஷ்பா படத்தோட முதல் பாகத்த இன்னும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்ல. இந்த படத்துல அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஒரு சாங்குக்கு சமந்தான்னு செம கலர்புல்லா நடிச்சிருந்தாங்க. வசூல்ல சாதன படச்ச புஷ்பா படத்தோட 2ம் பாகம் 2024 ஆகஸ்டு 15 தேதி ரிலீசாகுது. இந்த படம் உலகளவுல 1,000 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணும்னு சொல்லப்படுற நிலையில அல்லு அர்ஜூனுடைய சம்பளம் எகிறி போயிருக்கு.   படத்தோட லாஸ்ட்ல வர்ற லாபத்துல இருந்து 33%  […]

நடிகைகள் குறித்து குட்டி பத்மினி சர்ச்சை பேச்சு! மீண்டும் மீண்டுமா?

நடிகைகள் சினிமாவில் நீடித்திருக்க வேண்டும் என்றால் சிலவற்றை மறைத்தும் மறந்தும்தான் இருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கடந்த ஒரு வாரமாக திரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் செய்திதான் பேச்சுப் பொருளாக மாறியிருந்தது. ஒரு வழியாக மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்ட மன்னிப்பை நடிகை திரிஷாவும் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் மன்சூர் அலிகான் மீது சட்ட சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கிறது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் பிக்பாஸ்7ல் பேசிய நடிகை விசித்ரா தனக்கு நடந்த […]

மன்சூரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட திரிஷா! எக்ஸ் பக்கத்தில் பதிவு!

சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்டதாக நடிகை திரிஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் முகம் சுளிக்கும் வகையில் பேசியிருந்தது திரைத்துறை மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்தது.   அதன் தொடர்ச்சியாக நடிகர் மன்சூர் அலிகான் மீது […]

மனமுடைந்து போன விசித்ராவின் மகன்! கணவர் வேதனை!

விசித்ரா தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதை அறிந்த அவரது மூத்த மகன் கல்லூரிக்கு கூட செல்லாமல் மனமுடைந்து போயுள்ளதாக அவர் கணவர் தெரிவித்துள்ளார். பிக்பாஸ்7ல் பூகம்பம் என்ற டாஸ்கில் பேசிய விசித்ரா, தான் சந்தித்த பாலியல் அத்துமீறல் பிரச்சினைகள் குறித்து பேசியது சமூகவலைதளங்களில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. யார் அந்த நடிகர் என்றும், இவர்தான் அந்த நடிகர் என்றும் பல்வேறு யூகங்கள் இணையத்தில் வெளியாகி கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக […]

ஹீரோவான நடிகர் விஜய்சேதுபதியின் மகன்! ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாசேதுபதி ‘பீனிக்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் விஜய்சேதுபதி ஆரம்ப காலங்களில் சிறு சிறுவேடங்களில் திரைப்படங்களில் தலை காட்டிக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயல்பான நடிகர் என்ற பெயர் பெற்ற விஜய்சேதுபதி தனது மகனான சூர்யா சேதுபதியை […]