News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடித்தது.  இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடக்குமுறையில் கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு நிலவியது.

ஏன் இந்த போராட்டம்

சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் மூன்றாவது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். அதாவது 2009 மே 31-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 11,700 ரூபாய் ஊதியம் பெற்று வந்தனர்.   

2009-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக வந்ததும் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் 8000 ரூபாயாக குறைக்கப்பட்டது.  சம வேலைக்கு சம ஊதியம் கோரி சுமார் 15 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

திமுக உறுதிமொழி

இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வைத்து, திமுக கொடுத்த 311-வது வாக்குறுதியை திமுக வெளியிட்டது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியே இடைநிலை ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (Secondary Grade Seniority Teachers Association – SSTA) சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறை அராஜகம்

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மனிதாபிமானமே இல்லாமல் காவல் துறை கைது செய்தது. ஆனாலும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். மூன்றாவது நாளாக இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் உள்ள எழும்பூரில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

போராட்டக்காரர்களை தொடர்ந்து கைது செய்வதில் காவல் துறை அத்துமீறுகிறது. போராட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் தடுத்து வலுக்கட்டாயமாகக் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். போராட்டக்காரர்களைக் குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்கிறார்கள்.

இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்பதில் ஆசிரியர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை போராட்டக் களமாக மாத்திட்டாரே ஸ்டாலின்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link