Share via:
விஜய் கட்சியில் இப்போது 107 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் காங்கிரஸ் கட்சியை முழுமையாக நம்புகிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து
112 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
பெரும்பான்மைக்கு இன்னமும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவை. திருமாவளவன்,
ஐ.யு.எம்.எல். கட்சிகளை நம்ப முடியாது என்பதால் அதிமுகவில் இருந்து மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்களை
பதவி விலக வைக்கத் திட்டம் போடப்பட்டுள்ளது. பாதிக்குப் பாதி வெற்றி பெற்றாலே ஆட்சி
பெரும்பான்மை கிடைத்துவிடும் என்கிறார்கள். நேற்று மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய
நிலையில், மேலும் 8 பேரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்,
அன்புமணி என்று அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து தூய சக்திக்கு எதிராக கடுமையாக அறிக்கை
விட்டுள்ளனர்.
ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் பதவியை ராஜினாமா
செய்ததோடு 3பேருமே அடுத்த நிமிடமே தவெகவில் இணைந்திருப்பது இந்த நூற்றாண்டின் மிக கேவலமான
செயல். இப்போது வரும் இடைத்தேர்தலில் இவர்கள் தவெகவின் வேட்பாளராக போட்டியிடுவார்கள்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப்
போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார்
என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி.
முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு
இல்லை. த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச்
செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான்
மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள்,
‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.