Share via:
வரும் 2026 தேர்தலில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் கேட்போம், 50 தொகுதிகளில்
நிச்சயம் போட்டியிடுவோம் என்றெல்லாம் கடந்த சில நாட்களாக நிலவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் 23 சீட் என்று அதிரடி காட்டியிருப்பது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் நேரில் சந்தித்து ஆலோசனை
நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு விவரம் தொடர்பாக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு
ஒரு பட்டியல் தரப்பட்டுள்ளது.
அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி
தினகரனை சேர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் கூட்டணியில் இணையும் பட்சத்தில்
அவர்களுக்கான இடங்களை பாஜக ஒதுக்குகிறது. அதன்படி அதிமுகவுக்கு 170 தொகுதிகள், பாஜகவுக்கு
23 தொகுதிகள், பாமகவுக்கு 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், அமமுகவுக்கு 6
தொகுதிகள், ஓபிஎஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு 3 தொகுதிகள்
தரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவினர் தங்கள் வேண்டுகோளை தெரிவிக்க முன்வந்தபோது, நாங்கள்
கொடுத்திருக்கும் பட்டியலை ஆலோசனை செய்துவிட்டு வாருங்கள், அடுத்த வாரம் பேசிக்கொள்வோம்
என்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரத்தில் 30
சீட் கூட இல்லையென்றால் கூட்டணியே வேண்டாம் என்று பாஜகவினர் கொதிக்கிறார்கள்.
அதேபோல் நாங்கள் சேர்வதாகச் சொல்லவே இல்லையே என்று டிடிவி தினகரனும்
பன்னீர்செல்வமும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஜனவரியில் மோடி தமிழகம் வருகையில் ஒட்டுமொத்த
பஞ்சாயத்துகளுக்கும் விடை கிடைத்துவிடும்.