Share via:
பெஞ்சல் புயல் ஆடிவரும் ருத்ரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததில் இருந்து புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து மீட்புப்படையினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், விவசாய நிலமான ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பசுமாட்டிற்கு 40 ஆயிரம், கிடாரி கன்றுக்குட்டிக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.