Share via:
விஜய் ஆட்சிக்கு வந்ததும் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர்
பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்
பேரில், உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் ஐபிஎஸ்
நியமிக்கப்பட்டார். இன்று அவனாஷ் குமார் மாற்றப்பட்டு உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க்
நியமிக்கப்பட்டார்.
கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கரூர் பெருந்துயர வழக்கை
விசாரிக்க அப்போதைய திமுக அரசு அஸ்ரா கார்க் தலைமையில் தான் விசாரணை குழு அமைத்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
உளவுத்துறை ஐஜியாக நேர்மைக்கு பெயர் பெற்ற அஸ்ரா கார்க் நியமனம்
செய்யப்பட்டிருப்பது விஜய் எடுத்திருக்கும் சிறப்பான முடிவு என்று பாராட்டப்படுகிறது.
