Share via:
நன்கொடை என்ற பெயரில் கட்சிக்கு நிதி வசூல் செய்வதில் மோடியும்
அமித்ஷாவும் சூப்பர் ஸ்டார்க்ல் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்திருக்கிறார்கள்.
இந்த வசூல் வேட்டையில் திமுக மூன்றாவது இடத்தில் இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது.
கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள்
முறை, அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி வழங்க வழிவகை செய்தது. இதில் பெரும்பகுதி
பாஜகவிற்கே கிடைத்தது. எனவே, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து பத்திரங்கள்
ரத்து செய்யப்பட்டாலும், காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள்
மூலம் நிறுவனங்கள் நிதி வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 2024-25 நிதியாண்டில் பா.ஜ.க பெற்ற மொத்த நன்கொடை
விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டில்
பெறப்பட்ட ரூ.3,967 கோடியுடன் ஒப்பிடுகையில் 53% அதிகம். காங்கிரஸ் கட்சி அதே ஆண்டில்
ரூ.522.13 கோடி மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸை விட பா.ஜ.க சுமார் 12 மடங்கு அதிக நிதியைக்
கொண்டுள்ளது. திமுக 365 கோடி ரூபாய் வசூல் செய்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
12 முக்கிய எதிர்க்கட்சிகளின் மொத்த நன்கொடை ரூ.1,343 கோடி மட்டுமே.
இது பா.ஜ.க பெற்ற தொகையில் வெறும் 4-ல் ஒரு பங்குதான். பா.ஜ.க தாக்கல் செய்த 162 பக்க
அறிக்கையின்படி, நிதியின் பெரும்பகுதி பல்வேறு வழிகளில் கிடைத்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்,
வேதாந்தா லிமிடெட், மேக்ரோடெக் டெவலப்பர்ஸ், ஐ.டி.சி குழுமம் ஆகியவையே அதிகம் நிதி
கொடுத்த நிறுவனங்களாக உள்ளன.
அப்படியென்றால் இன்னும் ரெண்டு தேர்தலுக்கு பாஜக வசம் நிதி ரெடியாக
இருக்கிறது.