Share via:
கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் இல்லாத அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை
எல்லாம் ஈரோடு மீட்டிங்கில் விஜய் பேசியிருப்பது புதிய கூட்டணிக்கான அடித்தளம் என்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில், விஜயமங்கலம் பகுதியில் உள்ள
சரளையில் தவெக கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்திருந்தார். சென்னையில்
இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார் விஜய். பின்னர்
அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “செங்கோட்டையன் அண்ணன் தவெகவுக்கு
வந்தது மகிழ்ச்சியான விஷயம். அவரை போன்று இன்னும் நிறைய பேர் வருவார்கள் என்று சொன்னதுடன்
நில்லாமல் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாராட்டிப் பேசினார். இந்த விவகாரமே கூட்டணி
சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
இது குறித்து திமுகவினர், ‘’விஜய் அவரது தலைவா படத்துக்கு ’டைம்
டு லீட்’ என கேப்ஷன் போட்டதும் அந்த படத்தை ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். விஜய் கொடநாட்டுக்கு ஓடி, கைகட்டி மன்னிப்பு வீடியோ
எல்லாம் போட்டபிறகே படத்தை ரிலீஸ் செய்ய விட்டார். அப்போது ‘டைம் டு லீட்’ என்ற வாசகத்தின்
மீது மை பூசி அழித்துதான் படத்தை ரிலீஸ் செய்தார்கள்.
அப்போது, “ஜெயலலிதா ஏன் விஜய்யிடம் இவ்வளவு ஹார்ஷாக நடந்துகொள்கிறார்?
என மக்கள் நினைத்தார்கள். இப்போது அதே வார்த்தைகளை விஜய் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவை
விஜய் பாராட்டும் நேரமெல்லாம் அவர் கை கட்டி நிற்கும் படங்களே எல்லோருக்கும் ஞாபகம்
வரும் என்று தெரியாமல், தீயசக்தி திமுக என்று பேசியிருக்கிறார். கூட்டணி என்றால் நேரடியாகப்
பேசவேண்டியதுதானே’’ என்கிறார்கள்.
இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று
அவரது ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள், அதோடு இந்த விழாவில் நாஞ்சில் சம்பத்தைக் காணவே
இல்லை என்கிறார்கள். இதற்கு முந்தைய கூட்டங்கள் அளவுக்கு எழுச்சி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க
விஷயம்.