Share via:
கேரள மாநிலத்தில் ஹேமா குழு அறிக்கை தாக்கல் செய்த அறிக்கை சினிமாத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நடிகையும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியில் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரின் பெயர் அடிபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மோகன்லால் உள்ளிட்ட பிரமுகர்கள் தங்களின் நடிகர் சங்கப்பதவிகளை ராஜினாமா செய்து அதிர்ச்சியை கொடுத்தனர்.
சிறப்புப் புலனாய்வுக் குழு இதுவரை 18 பாலியல் வழக்குககள் பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு நடிகை தன்னிடம் ஸ்டார் நடிகர் ஒருவர் லிஃப்ட்டில் தகாத முறையில் நடந்து கொண்டார். ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு புகார்களின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ், சித்திக் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க நடிகர் ஜெயசூர்யா மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் ஜெயசூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார். அதன்படி இது அவர் மீது பதியப்பட்டுள்ள 2வது வழக்காகும்.
இவ்வழக்கில் அவர் வெளியே வரமுடியாத அளவுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.