News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் எப்போது வெளியே வருவார் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், முதல் சம்பவமே அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் செய்து முடித்திருக்கிறார். பெரியார் திடலுக்கு விஜய்  நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஏற்கெனவே பெரியார் பிறந்த நாளையொட்டி ஒரு செய்தி அனுப்பியிருந்தார். பெரியார் பாதையில் பயணிப்போம் என்று நேரடியாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து அனைவரும் வெளிவருவதற்குள் தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளையொட்டி பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

இன்று காலை முதல் அனைத்துக் கட்சிகளும் பெரியார் பிறந்த நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ராமதாஸ், அன்புமணி போன்றவர்களும் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பெரியாருக்கு எதிர்நிலையில் நிற்கும் சீமானுக்கும் தான் யார் என்பதைத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்.

முதல் சம்பவமே முக்கியமான ஒரு தலைவருக்கு நேரடியாக மரியாதை செலுத்தியிருக்கிறார் விஜய். அவரது கொள்கை என்ன? தலைவர் யார் என்று கேட்டுவந்த அனைவருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் தெளிவான பதில் கொடுத்திருக்கிறார். சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி வழியில் என்றும் தமிழக வெற்றிக் கழகம் பயணிக்கும். இனிமேல் விஜய் முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link