Share via:
தலைவர் 170 குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் மூலம் அடுத்த வெற்றியை கையில் எடுத்துள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், துஷாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’ இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான படப்பிடிப்புகள் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெகு விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்த் தோளில் அமிதாப்பச்சன் கை போட்டபடி இருவரும் அணைத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அதில், 33 வருடங்கள் கழித்து தான் அமிதாப்பச்சனுடன் தான் நடித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த நிகழ்வு ‘தலைவர் 170’ திரைப்படத்திற்காக என்று இயக்குனர் ஞானவேல் பெயரையும் பதிவிட்டுள்ளார். மேலும் தனது இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது ரஜினிகாந்த் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் பார்ப்பதற்கும் மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

