News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ரஜினிகாந்துடன் பணிபுரிவது எனக்கு கிடைத்த மரியாதை என்று நடிகர் அமிதாப்பச்சன் நெகிழ்ச்சியுடன் இணையத்தில்  பதிவிட்டுள்ளது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

நேற்று (அக்.25) நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 33 ஆண்டுகள் கழித்து அமிதாப்பச்சனுடன் தான் இணைந்து பணியாற்றுவது குறித்த பெருமிதத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள அமிதாப்பச்சன், ‘‘நீங்கள் எப்போதும் தன்மையானவர். படத்தின் தலைப்பை பாருங்கள். ‘தலைவர் 170’ தலைவர் என்றால் வழிநடத்துபவர், சீப். அதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா ரசிகர்களே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உங்களுடன் என்னை ஒப்பிடவே முடியாது. உங்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெருமை’’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த எக்ஸ் பதிவு ரஜினிகாந்த் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link