Share via:
விஜய் மக்களை
சந்திப்பதில்லை. அதேபோல் ஊடகங்களையும் சந்திப்பதில்லை. அது மட்டுமின்றி சொந்த கட்சி
எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களையும் அவர் சந்திப்பது இல்லை. மாற்றுக் கட்சியில் இருந்து
தன் கட்சியில் சேர வரும் முக்கிய நபர்களையும் சந்திப்பது இல்லை.
ஆனால் தினம் சினிமா கலைஞர்களை மட்டும் சந்தித்துப்
பேசுகிறார். நடிகை சினேகாவைத் தொடர்ந்து சிம்ரன் சந்தித்துப் பேசினார். அதேபோல் சிம்பு,
ஷாம் என்று கோலிவுட்டில் இருந்து தினமும் ஒருவர் வருகிறார்கள். பழைய நடிகைகள் விஜய்யைக்
கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் கண் கொள்ளாக் காட்சி என்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் கட்சியின் கொள்கைகளையும் செய்திகளையும்
சொல்வதற்கு வெற்றி
தொலைகாட்சி தொடங்கப்படுகிறது. தமிழக
வெற்றி கழகத்திற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் தொலைக்காட்சி சேனலின்
பெயரும் லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்பு
எஸ்எஸ் மியூசிக் சேனல் இடம் இருந்த லைசென்சை இவர்கள் பெற்று இந்த புதிய சேனலை
ஆரம்பிக்க இருக்கிறார்கள். இந்த எஸ்எஸ் மியூசிக் சேனலை மார்ட்டின் நடத்திவந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆதவ் அர்ஜூனா கைவண்ணத்தில் இந்த சேனல் ஒளிபரப்பைத்
தொடங்க இருக்கிறது. இந்த சேனலுக்கு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா டிவியின்
பின்னே இருக்கும் ஒரு பெரிய கட்டிடம் தயாராகி வருகிறது.
விஜய் பிறந்த நாளில்
இந்த சேனல் சோதனை ஒளிபரப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் முழு வீச்சில்
செயல்படத் தொடங்கும் என்கிறார்கள்.
இந்த
சேனலுக்காவது விஜய் பேட்டி கொடுப்பாரா..?