Share via:
மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதுபாண்டியர்களின் 222வது நினைவுநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் இது குறித்து கூறும்போது, ‘‘சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மருது பாண்டியர்களின் நினைவுநாள் விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டும் 3 நாட்கள் மதுபானக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த 3 நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.