Share via:
யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வேட்புமனு விநியோகத்தைத் தொடங்கினார்
எடப்பாடி பழனிசாமி. முதல் நாளில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று
மனுக்களை வாங்கிச் சென்றதைக் கண்டு பாஜக பதறி நிற்கிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தலில்
போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக விருப்பமனு விநியோகம்
தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15
ஆயிரம் செலுத்தி மனுக்களை பெற்றனர். புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப
மனுக்களை ரூ.5 ஆயிரம் செலுத்தி பெற்றனர். தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்கள்
விநியோகம் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் தங்களுக்காகவும், தங்கள்
தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடவும் மனுக்களை பெற்றுச்சென்றனர்.
நேற்று ஒரே நாளில் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் 349 பேர், தங்கள்
தொகுதியில் பழனிசாமி போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு
வேண்டி 888 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அதிமுக கட்சியும் கூட்டணியும் பலவீனம் என்று செய்தி பரப்பினாலும்
வேட்புமனுக்கு வட்டமிடும் கூட்டம் பாஜகவை பதற வைத்துள்ளது. ஏனென்றால், போட்டியிடுவதற்கு
நிறைய பேர் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே, அதிமுகவை எளிதில் கவிழ்த்துவிடலாம், அதிக
சீட் வாங்கிவிடலாம் என்று நினைத்தார்கள். தங்கள் ஆசை எல்லாமே மண்ணாகிப் போச்சே என்று
வருந்துகிறார்கள்.
60 சீட் லட்சியம் 50 சீட் நிச்சயம் என்பதெல்லாம் மாறிப்போய்
25 சீட்டாவது கிடைக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது.