Share via:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது? உள்ளிட்ட உட்கட்சி நிர்வாக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க. முறிவுக்கு பிறகு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எவ்வாறு களத்தில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்க உள்ளார்.
காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ள இக்கூட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடுவது குறித்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்த உள்ளார்.