News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகை அமலாபால் தனது காதலனான ஜெகத்தேசாயை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகை அமலாபாத் ‘சிந்துசமவெளி’ திரைப்படத்தில் வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை யார் இவர் என்று கேட்கவைத்துவிட்டார். அதைத்தொடர்ந்த மைனா, நிமிர்ந்துநில், தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


இதைத்தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர். இருப்பினும் சினிமாவில் கவனம் செலுத்திய நடிகை அமலாபால், வேலையில்லா பட்டதாரி2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்த நிலையில் தற்போது பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் நடிகை அமலாபால் சமீபத்தில் தனது காதலனை அறிமுகப்படுத்தினார். அந்தவீடியோவில் காதலன் ஜெகத் தேசாயின் காதலை ஏற்றுக் கொண்டார்.


இந்நிலையில் அமலாபால் ஜெகத்தேசாயை திருமணம் செய்து கொண்டார். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜெகத்தேசாய் சுற்றுலா மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர். மேலும் கோவாவில் உள்ள லக்சி ஹோம்சே ப்ராபர்ட்டி நிறுவனத்தில் தலைமை விற்பனை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அமலாபால் சுற்றுலா சென்ற போது ஜெகத்தேசாயை சந்தித்து நட்புடன் பழகியுள்ளார். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.


அமலாபால்& ஜெகத்தேசாய் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link