Share via:
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள பஹ்ரைன் நாடு தனது உறவை துண்டித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் ராணுவம்& காசா அமைப்பினரின் போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் குழந்தைகள் மற்றும் பெண்கள்தான் அதிகம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இன அழிப்புக்கு இணையான போர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேல் நாட்டிற்கு பல்வேறு நாடுகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மேலும் ஐ.நா. சபை கொண்ட வந்த போர் நிறுத்த தீர்மானத்தையும் இஸ்ரேல் நாடு தவிர்த்துவிட்டு, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக பூமியில் இருந்து துடைத்தெறிவோம் என்று சூளுரைத்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இஸ்ரேல் ராணுவம் தற்போது அகதிகள் முகாமையும் விட்டு வைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இஸ்ரேலுடன் உறவை புதுப்பித்திருந்த அரபு நாடுகள் பலவும் அதனை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் போக்கை கண்டித்து உலக நாடுகள் பலவும் அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இஸ்ரேலுக்கான தனது தூதர ஜோர்டான் திரும்ப அழைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது பஹ்ரைனும் தனது தூதரை திரும்ப அழைத்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக பொலிவியா தேசம் இஸ்ரேலுடனான உத்தியோகப்பூர்வ உறவுகளை முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் சிலி மற்றும் கொலம்பியாவும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது இஸ்ரேல் நாட்டிற்கு பல்வேறு வகைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

