Share via:
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பாகி உள்ளது.
தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற செய்தியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலான ரெசிடென்சியில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஓட்டல் ரியல் எஸ்டேட் உரிமையாளர் அப்பாசாமியின் மகன் ரவிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும் ரவியும், கலைஞரின் மூத்த மகன் மு.க. அழகிரிக்கு நெருங்கிய நண்பர் என்றும் சொல்லப்படுகிறது. அழகிரி சென்னைக்கு வரும்போதெல்லாம் ரெசிடென்சி ஓட்டலில் தான் தங்குவார் என்றும், இவருக்கென்னே ரெசிடென்சி ஓட்டலில் பிரத்யேகமாக ஒரு சூட் எப்போதுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.