Share via:
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்டு 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் பல்வேறு சாதனை படைத்துவிட்டது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது எதுவென்றால் அது காவாலா பாடல்தான். இத்திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சஞ்சய்தத், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
அதோடு காவாலா பாடலின் புரோமோவுக்கு ஒரு புரோமோ கொடுத்து அனிருத்தும், நெல்சனும் டிரெண்டானார்கள். அதைத்தொடர்ந்து லிரிக்கல் காவாலா பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து நடிகை தமன்னாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார்.
உலகளவில் வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ரூ.500 கோடி வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது. காவாலா பாடல் மட்டுமல்லாமல் ‘டைகர் கா ஹூக்கும்’ பாடலும் டிரெண்டாகி பலரின் காலர் டியூனாக மாறிப்போனது.
இந்நிலையில் அனிருத் இசையில் வெளியான ‘காவாலா’ பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் எத்தனை பாடல்கள் வந்தாலும் காவாலா பாடலை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

