Share via:
நடிகர் விஜய்யை ‘சூப்பர் ஹீரோ’ என்று பட்டம் கொடுதுத அழைத்த நடிகர் அர்ஜூனின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம்வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த மாதம் 19ம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் பாக்ஸ் ஆபிசை தெறிக்கவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.1) லியோ திரைப்பட வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், தயாரிப்பாளர் லலித், மன்சூர் அலிகான், கவுதம்வாசுதேவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த வெற்றி விழாவில் நடிகர் விஜய் சொல்லிய குட்டி ஸ்டோரியும், நடிகர்களின் அடைமொழி குறித்தும் பேசியது ரசிகர்கள் மத்தியில் ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜூன் பேசும்போது, ‘‘இந்த விழாவிற்கு வந்துள்ள சூப்பர் ஹீரோ விஜய், சூப்பர் டைரக்டர் லோகேஷ், விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். லியோ என்னுடைய கெரியரில் வித்தியாசமான படம். இதில் நிறைய பேருடன் முதல் முறையாக நடித்துள்ளேன். திரிஷாவுடன் எனக்கு லியோ 2வது படம்’’ என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய் குறித்து பேசும்போது, ‘‘நடிகர் விஜய்யை சிறு வயதில் இருந்தேன் பார்த்து இருக்கிறேன். கூச்ச சுபாவம் கொண்ட மனிதன். ஆனால் இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு முக்கிய நடிகராக உயர்ந்துள்ளார். அவரின் நேரம் தவறாமை மிகவும் பாராட்டுதலுக்குரியது என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் அர்ஜூன், ‘‘விஜய் அரசியலுக்கு சீக்கிரம் வந்துவிடுவார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமு என்ற எண்ணம் இருந்தாலே போதும். அந்த எண்ணம் நடிகர் விஜய்யிடம் உள்ளது’’ என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

