Share via:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளையும் திறந்து வைக்க இருக்கிறார். அரசுமுறை பயணத்துடன் சேர்த்து இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களுக்கும் அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரியமின்சக்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு சார்பில் ரூ.82.40 கோடி ஒதுக்கப்படும் என்றும் இத்திட்டத்தின் மூலம் பவுத்த உறவுகளை மேம்படுத்த முடியும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.