News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளர்களான நிக்சன்- ஐஸ்வர்யாவின் எல்லை மீறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


பிக்பாஸ் சீசன் 7 தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த 5 பேரை எப்படி காலி செய்வது என்று போட்டியாளர்கள் போடும் ஸ்கெட்சை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


இதற்கிடையில் போட்டியாளர்கள் நிக்சன்- ஐஸ்வர்யாவின் நெருக்கமான காட்சி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், நிக்சன் தற்போது முற்றிலும் அசல் கோளாறாக மாறியுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


நிக்சன் மீது தனக்கு காதல்  இல்லை என்று ஐஸ்வர்யா சொன்னாலும் கூட, இருவரும் நெருக்கமாகவே பழகி வருகிறார்கள். நாளுக்குநாள் அதிகரித்துவரும் அவர்களின் நெருக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. டேபிளின் மீது ஐஸ்வர்யா படுத்துக் கொண்டிருக்கும் போது, நிக்சன் அவர் அருகில் சென்று உன்னுடைய புருவம் அழகாக இருக்கிறது என்று தொடுவது போலவும், உன் உதடு கூட அழகாக இருக்கிறது என்றும் வழிவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதேபோல் கண்ணாடிக்கு இந்த பக்கம் அந்த பக்கமுமாக இருவரும் செய்த ‘மருத்துவ முத்த’ காட்சிகளும் ரசிகர்களை பழைய சீசன் காதல்களை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link