News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கன்னட நடிகையான தேஜஸ்வினி ஷர்மாவின் கிளாசிக் கிளிக்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

கன்னட நடிகையான தேஜஸ்வினி ஷர்மா, இயக்குனர் ஆர்யா எம்.மகேஷ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி வெளியான இங்கிலிஷ் மஞ்சா கன்னட திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு முன்னர் மார்ச் 10ம் தேதி இயக்குனர் மனோஜ் பி நடலுமனே இயக்கத்தில் வெளியான மேரி திரைப்படத்திலும் அசத்தலாக நடித்திருந்தார்.

 

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 17ம் தேதி இயக்குனர் என்.விநாயகா இயக்கத்தில் வெளியாக உள்ள ஃபுல் மீல்ஸ் திரைப்படத்தில் நடிகை தேஜஸ்வினி ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை தேஜஸ்வினி ஷர்மா தனது அசத்தலான புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சேலை அணிந்த சோலையாக தேஜஸ்வினி ஷர்மாவின் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link