Share via:
மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று (அக்.30) கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அங்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழ் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துமராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமானப் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் அப்பல்லோ சந்திப்பில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.