Share via:
கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களையும் காப்பாற்றுவோம் என்று பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது.
கத்தார் நாட்டில், அல் தஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்திய கடற்பனை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 8 பேரையும் கடந்த 2022ம் ஆண்டு கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர்.
மேலும் அந்நாட்டு நீதிமன்றம் 8 பேருக்கும் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. இவ்விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாக கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்நிலையில் கத்தாருக்கான இந்திய தூதர் இவ்விவகாரம் குறித்து கூறும்போது, ‘‘சிறையில் உள்ள 8 பேரின் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பதாகவும், அவர்களை மீட்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதற்கிடையில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரான அஜய் அலோக் கூறும்போது, இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரையும் சட்டரீதியாக மீட்போம். இவ்விவகாரத்தில் மத்திய அரசு நிச்சயமாக வெல்லும் என்று உறுதிபட தெரிவித்தார்.