News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மேலிடக்குழுவினர் இன்று சந்தித்த போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருவதாக தி.மு.க.வினர் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் வீட்டு முன்பாக பா.ஜ.க. கட்சிக் கொடி அகற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 7 பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் குறித்து அண்ணாமலையும் பா.ஜ.க. மேலிடத்தில் புகார் தெரிவித்தார்.

இதன் எதிரொலியாக தேசிய பா.ஜ.க. தலைவரான ஜே.பி. நட்டா ஏற்படுத்திய 4 பேர் கொண்ட மேலிடக்குழு நேற்று மாலை சென்னை வந்தது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஸ்வரி, எம்.பி. சத்யபால்சிங், பெங்களூர் எம்.பி. மோகன் உள்ளிட்டோர் சென்னையில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலாயத்திற்கு நேற்று மாலை 7 மணியளவில் வந்தனர்.

அனைத்து மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளுடன் இந்த சந்திப்பு நள்ளிரவு 12 மணிவரையில் நீடித்தது. அப்போது நடைபெற்ற விவாதத்தின் போது 103 பேர் தங்கள் பகுதிகளில் தி.மு.க.வினரால் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக புகார் கூறினார்கள். மேலும் அவர்கள் சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் புகார்களை உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்களையும் மேலிடக்குழுவிடம் மாவட்ட நிர்வாகிகள் அளித்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க. மேலிடக்குழு பனையூருக்கு நேரில் சென்று மோதல் குறித்து அக்கம் பக்கத்து வீட்டில் விசாரணை நடத்தினர். 

அதைத்தொடர்ந்து இன்று மதியம் பா.ஜ.க. மேலிடக்குழு கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்கள்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பின் போது, பாஜ.க.வுக்கு எதிராக புனையப்பட்டுள்ள வழக்கு விவரங்கள், அதற்கான ஆதாரங்களும் மேலிடக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தி.மு.க.வினர் மீது எந்த வழக்கும் பதியப்படுவது இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link