Share via:
கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கானாத்தூர் போலீசார், பா.ஜ.க. மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைத செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அமர்பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தின் மீது பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியதாக அமர்பிரசாத் மீது புகார் எழுந்ததை தொடரந்து கோட்டூர்புரம் போலீசார் அவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.