Share via:
ஸ்டாலின் படிப்படியாக முன்னேறியவர், யாருடைய கால்களில் விழுந்து அவர் முதலமைச்சர் ஆகவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர்கள் அணி செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, ‘‘தலைமை கூறுவதை செயல்படுத்தி காட்டுபவர்களே உண்மையான செயல்வீரர்கள்; மருது சகோதரர்கள் போல விருதுநகர் மாவட்டத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர் என்று அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்
தொடர்ந்து பேசிய அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் முதன்முதலாக இளைஞர் அணி என்ற ஒரு அணியை உருவாக்கியது திமுக தான் என்பதை நினைவுகூர்ந்தார். மேலும் நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக முன்னேறியவர், யாருடைய கால்களில் விழுந்தும் அவர் முதலமைச்சர் ஆகவில்லை’’ என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையை கேட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் அணியினர் உற்சாகமாக கைத்தட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.