News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் இருப்பது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தலாசீமியா என்ற மரபணு நோய்க்கான சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவர்களுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட நிலையில், அதில் 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. அதில் 2 பேருக்கு எச்.ஐ.வி.யும், 7 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 5 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பதும் கண்டறியப்பட்டது.

சிறுவர்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சுத்தீகரிக்கப்படாதது என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link