Share via:
0
Shares
அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அது தற்போது 46 சதவீதமாக (4 சதவீதம் உயர்ந்துள்ளது) உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த உயர்வு 2023 ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 லட்சம் பேர் இந்த அகவிலைப்படி உயர்வால் பயன்பெற உள்ள நிலையில் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,546 கோடி கூடுதல் செலவினமாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரப்போகும் தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த அகவிலைப்படி உயர்வால் பெருத்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tagged latest