Share via:
பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் கடிதத்தை பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்து அனுப்பி ஆறுதல் கூறினார்.
ஆதிபராக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19ம் தேதி (அக்டோபர்) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தும் விதமாக, மருவூர் சின்னவர் அம்மாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சந்திப்பின் போது பிரதர் மோடி விடுத்திருந்த இரங்கல் குறிப்பு கடிதத்தையும் அண்ணாமலை, பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரிடம் படித்து தங்களின் இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அதன் பின்னர் மறைந்த பங்காரு அடிகளாரின் திருவுருவ படத்திற்கு அண்ணாமலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.