Share via:
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையரான சத்யபிரதா சாகு இன்று மதியம் 12 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்படி இக்கூட்டத்தில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. சார்பில் டி.ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிப் பிரதிநிதிகளுடன், பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.