News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில், அது நேற்று அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அதன் பின்னர் மிகத்தீவிர புயலாக மாறிய நிலையில் அதற்கு ஹமூன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் இன்று ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா& சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் ஹமூன் புயல் வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடந்தது. எனவே அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த புயலின் தாக்கம்  வருகிற 27ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அன்று வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுதுத 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link