Share via:
வருகிற 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதைத்தொடர்ந்து அக்டோபர் 30ம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்கிறார். அங்கு நடைபெறும் குரு பூஜையிலும் அவர் கலந்து கொள்கிறார். இறுதியாக மதுரையில் இருந்து பிற்பகல் 2.45-க்கு புறப்படும் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.