Share via:
ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று! ஜி20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார்!
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்கமாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லியில் நாளையும் (செப்.9) மற்றும் நாளை மறுநாள் (செப்.10) ஆகிய 2 நாட்கள் ஜி20 மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சர்வதேச நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட சில தலைவர்கள் இந்தியா வந்துள்ள நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில், ஸ்பெயின் நாட்டு அதிபர் பெட்ரோ சான்செஸ் இந்தியாவிற்கு வரவிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஜி20 மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்கமாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.