Share via:
உலகக்கோப்பை 2023 தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்றைய (அக்.20) ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்றுப் போனது. அப்படி இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் இந்தியா தனது வெற்றிக்கனியை பறித்து சாதனை புரிந்த இந்திய அணிக்கு, பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியிடமும் தோற்றுப் போனது பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

