Share via:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள திரு.வி.க. நகர் பகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானத்தை திறந்துவைத்தார்.
ரூ.3 கோடி செலவில் திரு.வி.க.நகர், பல்லவன் சாலை பகுதியில் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்தாட்ட மைதானம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இம்மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது புதிய மைதானத்தில் கால்பந்தாட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாஸ் போட்டு தொடங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஜவகர் நகர் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு இலவச கண் மருத்துவமனையினையும் அவர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.5.95 கோடி மதிப்பீட்டிலான 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், இறுதியாக கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.