News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருப்பூர் மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் போது நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் காரில் அமர்ந்தபடி அண்ணாமலை உணவு அருந்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட பகுதிகளான பல்லடம், அவுநாசி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற யாத்திரையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது யாத்திரையின் போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவரான சங்கீதா திடீரென்று மயங்கி கீழே விழுந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதைத்தொடர்ந்து சங்கீதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அண்ணாமலை இரவு 10.30 மணியளவில் சோமனூர் பேருந்து நிலையம் அருகே தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

இந்நிலையில் கோவை& திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அண்ணாமலை தனது காரை நிறுத்திய அவர் காரில் அமர்ந்தபடியே முன்பக்கத்தில் இரவு உணவை சாப்பிட்ட நிலையில், பின் பக்கம் வானதி சீனிவாசன் உணவு சாப்பிட்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link