News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ஆவின் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதற்கான காரணம் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 13.10.2023 அன்று ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸ் கூறும்போது, ‘‘கடந்த செப்டம்பர் மாதத்தோடு அக்டோபர் மாதம் 11ம் தேதி வரை ஒப்பிடும் போது 15 நாட்கள் இடைவெளியில், ஆவினுக்கான பால் கொள்முதல் சுமார் 1.11லட்சம் லிட்டர் இன்னும் கூடுதலாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதம் கூடுதல் கொழுப்பு சத்துள்ள பாலுக்கு அதிக கொள்முதல் விலையும், லிட்டருக்கு 1 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பின்னர் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பால் கொள்முதல் கடும் சரிவை சந்தித்துள்ளது. 

நிர்வாக இயக்குனர் பொது  மேலாளர்கள் மற்றும் கொள்முதல் பிரிவை சார்ந்தவர்கள் தவறாமல் களத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலக ஊழியர்களையும் பால் கொள்முதல் அதிகரிக்கும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். ஆவினுக்கான பால் கொள்முதல் கடுமையாக சரிவடைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் வெண்ணெய், நெய், பனீர் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் பால் நிறுவனத்திற்கே தொடர்பில்லாத இனிப்பு, கார வகைகளை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வருவதாக அந்த கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link