Share via:
வடகொரியாவில் தேச துரோகம் செய்ததாக கூறப்பட்ட ராணுவ தளபதி ஒருவர் ராட்சத மீன் தொட்டியில் வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா என்றாலே வினோதங்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் அளவுக்கு பல விசித்திர நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. உலகில் இருந்து வடகொரியா முற்றிலும் தனித்து நிற்கிறது. அதன் அதிபராக கிம் ஜாங் உன் தனக்கு பிடிக்காத நபர்களையும், தனக்கு ஆகாத நபர்களையும் மிகமோசமாக நடத்தி வருகிறார் என்று இணையத்தில் செய்தி உலா வருவது வழக்கமாகிவிட்டது.
இதற்கிடையில் வடகொரியாவில் நடந்த கொடூர கொலை குறித்து சர்வதேச ஊடகங்களில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘‘ராணுவ தளபதி ஒருவர் தேச துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவரை பிரானா மீன்கள் இருக்கும் தொட்டியில் வீசி கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
வடகொரியாவை கைப்பற்றி தனக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம் சுமத்திய அதிபர் கிம் ஜாங் உன், இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காகவே ரியாங்சாங்கில் உள்ள அவரது இல்லத்தில் ராட்சத மீன் தொட்டி ஒன்றை கட்டியதாக கூறப்படுகிறது. பிரானா மீன்களை பிரேசிலில் இருந்து அவர் இறக்குமதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ராணுவ தளபதி மீன் தொட்டியில் வீசப்படுவதற்கு முன்பாக அவரது கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டதாகவும் ஊடக செய்தி கூறுகின்றன. இருப்பினும் ராணுவத்தளபதி காயங்களால் உயிரிழந்தாரா? மீன்கள் கடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது தண்ணீரில் மூச்சுத்திணறி உயிரிழந்தா என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிரானா மீன்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்து அதிர்ச்சியாக இருப்போம். ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்றால், நினைத்து பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது.