Share via:
நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்தாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நடிகர் அஜித்குமாரின் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் எந்த அளவுக்கு சமூகவலைதளங்களில் வைரலாகிறதோ அதே அளவுக்கு அவரது குடும்ப புகைப்படங்களும் இணையத்தை தெறிக்கவிடும். அஜித் குடும்பத்தார் சினிமாவுக்கு சென்றால் கூட அதை இணையவாசிகள் லைக் செய்துவிடுவார்கள்.
நட்சத்திர தம்பதியான அஜித்& ஷாலினியின் மகனான ஆத்விக் கால்பந்து போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடும் ஆத்விக் தன்னுடைய குடும்பத்துடன் பயிற்சி மைதானத்தில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஆத்விக் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
அதை நிரூபிக்கும் வகையில் ஆத்விக், கால்பந்து விளையாட்டு போட்டியில் தனது அணியுடன் இணைந்து விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது குறித்த திரைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி திரைப்படத்திற்காக அஜர்பைஜானில் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆத்விக்கின் வெற்றி அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

