Share via:
தன் பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.
இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இன்றைய தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அனைவருமே ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர.
இந்நிலையில் இந்தியாவில் தன் பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்பது இனி மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால் இந்தியாவின் தன் பாலின திருமணத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா? அளிக்காதா என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.
இந்தியாவில் நிலைமை இப்படியிருக்க, உலகின் 34 நாடுகளில் தன் பாலின திருமணங்கள் அனுமதிக்கப்பட்டுளளன. முன்பெல்லாம் காதலுக்கு மொழி கிடையாது, மதம் கிடையாது, இனம் கிடையாது என்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எந்த பாலினம் என்பது கிடையாது என்ற அளவிற்கு மாறியுள்ளது.
அதன்படி உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, தைவான், கூபா, அன்டோரா, ஸ்லோவெனியா, சுவிட்சர்லாந்து, கோஸ்டரிகா, ஆஸ்திரியா, ஈகுவடார், பெல்ஜியம், டென்மார்க், பில்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து லக்சம்பர்க், மால்டா, நார்வே, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் மனித உரிமைகள் பிரசார அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் இந்தியாவும் இணையுமா என்பது மத்திய அரசின் முடிவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.